யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற கண்களை கலங்க வைக்கும் உணர்ச்சிமிகு சம்பவம் ! படம் உள்ள

0

தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இன்றைய தினம் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களில் மக்கள் தயாராகி வருகின்றனர்.இந்த நிலையில் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு இன்று காலை 8 மணியளவில் சென்றுள்ளனர்.இதில் தமக்கும் சுடேரேற்றுவதற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளனர்.

இதை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சுடேரேற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு இரத்த உறவுகள் வந்து அஞ்சலி செலுத்தும் நிலையில், கடல் கடந்து வந்து எமது தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை அங்குள்ள மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.