யாழ்ப்பாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை: அருகில் நெருங்கிவிட்டது கஜா!

0

மத்திய வங்காள விரிகுடாவில் உருவான கஜா என்ற சூறாவளித்தொகுதி யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்வதால் மக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தருகையில்,

”இன்று இரவு தென் தமிழ்நாடு கரையைக் கடப்பதுடன் இலங்கையின் வடக்கு கரைக்கு நெருக்கமாகவும் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக வட மாகாணத்தில் இன்று மாலையிலிருந்து காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வரையான கரையோரத்தின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் உட்புகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. யாழ் குடாநாட்டில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில்100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று (15ஆம் திகதி) மாலையிலிருந்து வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.