யாழ் பல்கலைக்கழகத்தில் திரண்டெழுந்த மாணவர்கள் ! உணர்வுபூர்வமாக மாவீரர்நாள் அனுஷ்டிப்பு ! படங்கள் உள்ளே
இன்றையதினம் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக சமூகமும் தீபமேற்றி மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டதுடன், மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்திலான கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தியதுடன், மௌன அஞ்சலியும் செலுத்தியதை காணக்கூடியதாக இருந்தது ..