ரணில் – கோட்டாபய சந்திப்பில் நடந்தது என்ன? வெளியான தகவல்!

0

நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சு தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் மைத்திரி – மஹிந்த கூட்டணி அரசாங்கத்திற்கான பெரும்பான்மையை ஏற்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் இலகுவாக தீர்க்க முடியுமான வழிகள் தொடர்பாக நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில், நேற்று முன்தினம் (01.11.2018) மாலை இடம்பெற்ற சந்திப்பு, சுமார் 7 நிமிடங்கள் மாத்திரமே நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகைக்கு விரைந்த கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய பேச்சு தொடர்பாக தென்னிலங்கை அரசியல் களத்தில் பலவிதமான கருத்துக்கள் வெளியாகிவந்தன.

இந்த நிலையில் இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டியவிலுள்ள ராஜபக்ச கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் பிரதமருடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிற்கமைய தாம் அலரிமாளிகைக்கு சென்றதாகவும், இதில் அலரிமாளிகை விவகாரம் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.