ரணில் பக்கம் வந்தவர் மீண்டும் மஹிந்த பக்கம்?

0

மைத்திரி மஹிந்த கூட்டணி அரசில் அமைச்சுப் பதவியை பெற்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்ற வசந்த சேனாநாயக்க இன்றைய தினம் அமைச்சரவைக் கூடத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனநாயக்க மைத்திரி மஹிந்த கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து கொண்டு சுற்றுலாத்து துறை அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

எனினும் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து வசந்த சேனாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்த நிலையிலேயே வசந்த சேனாநாயக்க இன்றைய தினம் அமைச்சரவைக் கூடத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.

எனினும் தனது அமைச்சர்பதவியினை இராஜினாமா செய்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.