கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம்சாட்டினார்கள். அத்துடன் வலைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக கூறியுள்ளனர்.