லயன் ஏர் விமான விபத்து – வெளியாகிய தகவல்கள்!

0

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசியா லையன் ஏர் விமானம் குறித்த அதிர்ச்சிகர தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அக்டோபர் 29-ம் தேதி காலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவு நோக்கிப் புறப்பட்ட ஜெடி-610 என்ற விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 189 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற மீட்புப்பணிகளில் இதுவரை 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காண மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதைக் கண்டறிய உதவும் விமானத்தின் கருப்பு பெட்டி கடந்த நவம்பர் 1-ம் தேதியன்று இந்தோனேசியாவின் உள்நீச்சல் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பு பெட்டியில் பதிவாகியவற்றைக் கண்டறியும் தீவிர பணியில் ஈடுபட்டிருந்தனர் அதிகாரிகள். இருப்பினும் கருப்பு பெட்டியில் பதிவான சில தகவல்களை கண்டறிய முடியாமல் திணறினர். இதையடுத்து அந்தப் பெட்டியில் இருக்கும் பிங்க் என்ற இயந்திரம் காணாமல் போயுள்ளது அதைக் கண்டுபிடித்தால் விபத்துக்கான காரணத்தை எளிதில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இரண்டாவது முறையாகக் கருப்பு பெட்டியில் தொலைந்த பிங்க் என்ற இயந்திரத்தைத் தேட உள் நீச்சல் வீரர்கள் மீண்டும் கடலுக்குள் சென்றனர். அந்த குழுவில் சைஹருல் அண்டோ என்ற 48 வயது வீரரும் இருந்துள்ளார். சைஹருல் தேடும் பணியில் ஈடுபடாமல் நீண்ட நேரமாக மிதப்பதை அருகில் இருந்த சக வீரர் ஒருவர் பார்த்துள்ளார். உடனடியாக தரையில் இருந்த அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து சைஹரூலை மீட்கும் பணியில் ஈடுபட்டு விரைவில் அவரை மேலே கொண்டுவந்தனர். அதன் பின் நடந்த பரிசோதனையில் சைஹருல் மூச்சு திணறி உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடலுக்கு அடியில் ஆக்சிஜன் அளவு மிக மிகக் குறைவாக இருந்ததுதான் அவரின் இறப்புக்குக் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முந்தையநாள் அதில் பழுது இருந்துள்ளது. அது சரிசெய்யப்பட்ட பின்புதான் 29-ம் தேதி காலை இயக்கப்பட்டதாக முதலில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலின் படி விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மிகவும் வேகமாகச் சென்றுள்ளது. தொடர்ந்து அடுத்த 10 நிமிடங்களில் விமானம் செயலிக்கவே பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இறுதியாக 400 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக விமானம் கடலில் விழுந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் விமானம் செங்குத்தாக விழுந்ததற்காகக் காரணம், விபத்துக்கான முக்கிய காரணம் போன்றவை கருப்புப் பெட்டியில் தொலைந்த பாகங்கள் கிடைத்தவுடன் தெளிவாக தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.