நேற்று முன்தினம் (30.10.2018 செவ்வாய்கிழமை) சிறுவர்,முதியோர் தின நிகழ்வும் மாணவர் பாராட்டு விழாவும் சிவபுரம் அ.த.க.பாடசாலை மைதானத்தில் காலை 10 மணிக்கு கிராம சேவையாளர் #திரு_ஜே_அமலதாஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது .
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அல்ஹாஜ்_I_M_ஹனீபா அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரதேச செயலாளர் திரு_கா_உதயராசா அவர்களும் கௌரவ விருந்தினராக வவுனியா அப்பரல்ஸ் உதவி நிதி முகாமையாளர் திரு_கோ_பிரவீன்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
மேலும் , பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர்சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் என அனைவருக்கும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் இந்த வருடம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக 3ம் இடத்தையும் மாவட்ட ரீதியாக 1ம் இடத்தையும் பெற்ற மாணவி செல்வி_பாலகுமார்_ஹிர்த்திக்_ஹன்சுஹா அவர்களையும் பரிட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிவபுரம்_ஹிஜ்ராபுரம்_அரபாநகர்_புதியகோவில்குளம்_செல்வாநாகர்_செக்கடிப்பிலவு_புளிதரித்தபுளியங்குளம் கிராம முதியவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு திறம்பட நடைபெற அனைத்து வகையிலும் உதவி புரிந்த அனைவருக்கும் இரு கரம் கூப்பி விழா ஏற்பாட்டு குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான லாயா கல்லூரியின் நிறுவுனர் ,கணித பாட ஆசிரியர் சுரேஷ் தெரிவித்துள்ளார் .