வவுனியாவில் மரத்தில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு ! படங்கள் உள்ளே

0

வவுனியா மரக்காரம்பளை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று (29.11.2018) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரக்காரம்பளை வீதி , ஈசன் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாகவுள்ள மாமரத்தில் தூக்கில் தூக்கிய நிலையில் 43 வயதுடைய இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி தலமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.