தாய் தவறவிட்ட குரங்கு குட்டியை தன் முதுகில் சுமந்து திரியும் நாய் ! வவுனியாவில் சம்பவம் ! படங்கள் உள்ளே

0

மரத்திலிருந்து விழுந்த மூன்று மாதங்களேயான குரங்கு குட்டியை தன் முதுகில் சுமந்து திரியும் நாய் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வவுனியா கருவேப்பங்குளம் பகுதியில் குறித்த சம்பவம் நடைபெற்றதுடன், தமதுவீட்டு மாமரத்தில் நின்றகுரங்குளை உரிமையாளர் துரத்தியபோது அதிலிருந்து சிறியகுரங்கு குட்டிஒன்று கீழே விழுந்துள்ளது.

இந்நிலையில் அவர்அதனை பராமரித்து வந்துள்ளார். அவரது வீட்டில் கண்ணன் என்று அழைக்கப்படும் வளர்ப்பு நாய் குறித்த குரங்கு குட்டியுடன் நட்பாக இருப்பதுடன் தனதுமுதுகில் சுமந்து அன்பு பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தான் போகும் இடம் எல்லாம் துளசி என்று அழைக்கபடும் அந்த குரங் குகுட்டியையும் முதுகில் சுமந்தவண்ணம் கூட்டி செல்கின்றது. குரங் குட்டியை யாரும்பிடிக்க வந்தால் நாய் அவர்களிற்கு கடிக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. தாம் வெளியில் சென்றாலும் நாய் குட்டியை பாதுகாப்பாக கவனித்து வருவதாக வீட்டின் உரிமையாளர் கூறுகிறார்.

வீட்டின் உரிமையாளர் தனது பிள்ளைகளுக்கு நிகராக வளர்ப்பு நாயையும், குரங்கு குட்டியினையும் பராமரித்து வருகின்றார். இந்த சம்பவம் வவுனியா மக்களிற்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.