வவுனியாவில் விவசாயியை விடாமல் விரட்டிய யானை ! இறுதியில் நடந்தது என்ன ?

0

வவுனியா யானைதாக்குதலில் விவசாயி தப்பி ஓட்டம் – மோட்டார் சைக்கிள் சேதம் வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் 2மணியளவில் யானைதாக்குதலில் விவசாயி உயிர் தப்பியுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் சேதமைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று ஓமந்தை இளமருதங்குளம் பகுதியிலுள்ள தனது வயலினை பார்வையிடுவதற்காக பிற்பகல் 2மணியளவில் விவசாயி சென்றுள்ளார். இதன்போது அங்கு ஒழிந்திருந்த காட்டு யானை குறித்த விவசாயி வருவதை அவதானித்துள்ளதுடன் அவரைத்துரத்திச் சென்று அவரைத்தாக்க முற்பட்டுள்ளது.

சம்பவத்தினை உணர்ந்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் அயலவர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் கைவிட்டு சென்ற தனது பாவனையில் இருந்த மோட்டார் சைக்கிளினைத் தேடிச் சென்றபோது மோட்டார் சைக்கிள் யானையின் தாக்குதலில் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் அப்பகுதியில் யானைக்கான மின்சார பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. யானை மின்சார வேலிக்கு அமைக்கப்பட்ட வாசல் பகுதியால் வயலுக்கு வந்துள்ளது குறித்த வாசல்பகுதியில் காவலாளி காணப்படவில்லை. என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.