வாய்ப்பின்மை… தொடர் சோகம்…. சீரியல் நடிகர் விஜயராஜ் உயிரிழந்த பின்னணி!

0

சீரியல் நடிகர் விஜயராஜ் நேற்றிரவு 1.15 மணியளவில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 42. ’சித்தி’யில் அறிமுகமான விஜயராஜ் தொடர்ந்து ‘கோலங்கள்’, ‘மெட்டி ஒலி’, ‘நாதஸ்வரம்’ ‘கல்யாண வீடு’ உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கிறார். இவரது சொந்த ஊர் பழனி.

எம்டன் மகன், காதலும் கடந்து போகும், செம போத ஆகாத ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சீரியல், பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள் உறவினர்கள். சில மாதங்களுக்கு முன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அது குறித்துப் பேசிய போது கண் கலங்கியிருக்கிறார். தீபாவளியைக் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து பழனி சென்றிருந்த நிலையில் அங்கு மரணமடைந்திருக்கிறார். விஜயராஜின் மனைவி ராமலட்சுமி பழனி அருகேயுள்ள ஆயக்குடியைச் சேர்ந்தவர். ஒரே மகள் ஐஸ்வர்யா இரண்டாவது படிக்கிறார்.

இன்று மாலை பழனியில் விஜயராஜின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ’எம்டன் மகன்’ படத்தில் சாவு ஊர்வலத்தில் பரத்துடன் இவர் ஆடும் ‘வர்றாரு வர்றாரு யார் வர்றாரு..’ பாடல்தான், விஜய் சேதுபதி ஆடும் ‘மக்க கலங்குதப்பா’ பாடலுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். வயதாகி இறந்த முதியவர்களின் சாவைக் கொண்டாடச் சொன்ன விஜயராஜ் 41 வயதில் மரணித்த அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது சின்னதிரை வட்டாரம்.

Leave A Reply

Your email address will not be published.