விசேட செய்தி ! மைத்திரி மீண்டும் அதிரடி ! அதிர்ச்சியில் ரணில் தரப்பு !

0

சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அவசரமாக அழைத்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது, நேற்றைய தினம் கட்சித் தலைவர்களிடம் பேசிய விடயங்கள் குறித்து மஹிந்த ராஜபக்‌ஷவிடம் விளக்கியுள்ளார்.

இதன்படி அரசியலமைப்பின்படியே எல்லாம் நடக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியதாகவும் – பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்க முடியாதென்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் – மஹிந்தவிடம் விளக்கிக் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் கடமைகளை தொடருமாறும் மஹிந்தவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் தம்மைச் சந்தித்த மைத்திரி, நாளைய தினம் மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிபந்தனைகளுடன் நடத்துமாறும் அதனை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததாகவும் கட்சித் தலைவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் மைத்திரியின் இந்த திடீர் மாற்றம் பெருத்த அதிர்வலையை மீண்டும் தோற்றுவித்துளதாக அரசியல் பிரதானி ஒருவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.