விடுதலை புலி உறுப்பினர்களை விடுவிப்போம்! நாமல் உறுதி!

0

புதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதுடன், 3,000 க்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் மீதமுள்ள போராளிகளை புனர்வாழ்வளிக்கும் வகையில் செயற்படும் என கூறினார்.

மேலும் இந்த புதிய அரசாங்கம் அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரங்களைக் கண்டறிந்து உதவும் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.