தகாத உறவு ! 2 பிள்ளைகளின் தாயான கள்ளக்காதலியை போட்டு தள்ளிய கள்ளக்காதலன் !

0

முல்லேரியா பொலிஸ் பிரிவில் களணிமுல்ல – கங்கபோட வெலே கோவிலில் உள்ள காளி அம்மன் சிலைக்கு முன்னால் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை போத்தலால் கொடுரமாக தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த நபரொருவர் கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டதாக மிரிஹான சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவறான தொடர்பைப் பேணியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிந்திவெல, பாபிலிவெலா மற்றும் வேரஹரா பிரதேசத்தைச் சேர்ந்த தமாரா தில்ருக்சி சமராநாயக்க என்ற (42 வயது) பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த பெண் சிவில் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், கணவர் அவரை விட்டுப் பிரிந்து மற்றொரு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குறித்த பெண்ணுடன் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரின் சாரதி தொடர்பைப் பேணி வந்ததாக கூறப்படுகிறது. குறித்த பெண்ணை ஹொட்டலுக்கு அழைத்துச் சென்ற பின்னர் சந்தேக நபர் கோவிலுக்கு அழைத்துச் சென்று இந்தகொலையைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தபெண்ணின் கைப்பை பியகம ஆற்றில் வீசப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 34 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.