13 நிரூபிப்பா? கலைப்பா? ஒத்திவைப்பா? அடாது மழை விடாது நாடகம்!

0

அடாது மழை பொழிந்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என சொல்வார்கள் அல்லவா? இலங்கையின் சமகாலத்தில் இது எள்ளல்மொழியல்ல. உண்மையில் அந்தத்தீவில் இப்போது அடாது மழைகொட்டினாலும் அரசியல் நாடகங்களும் விடாது நடக்கின்றன.

வங்கக்கடலில் தென்மேற்கில் உருவாகிய காற்றழுத்ததாழ்வு மண்டலங்கள் இலங்கையில்; மழையைபொழிய வைக்கிறது. இந்த வளிமண்டலத்தாழ்வுநிலை அகன்றால் அடாது மழையில் இருந்து அந்ததீவுக்கு ஒரு வெளிப்புவரக்க்கூடும்.

ஆனால் அதேதீவின் அரசியல் நாடகங்களை முடிவுறுத்தக்கூடிய தாழமுக்க மண்டலங்கள் எப்போது தணியக்கூடும்? இந்தவினாவுக்கு இதுவரை யாரிடமும் உறுதியான பதிலில்லை.

எனினும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டும்படியான குரல்களும் போராட்டங்களும் தொடர்கின்றன. அந்தவகையில் இன்றும் ஐக்கிய தேசியக்கட்சி மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணி கொழும்பில் வாகனப்பேரணியொன்றை நடத்திக்காட்டியது

நாடாளுமன்றத்தில் தனக்குரியபெரும்பான்மை பலத்தைக்காட்டுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுமாயின் எதிர்காலத்திலும் அரசதலைவர் மைத்திரியுடன் இணைந்த ஆட்சியை நகர்த்தத்தயாரென்றரணிலின் செய்தி இந்தியாவின் தி ஹிண்டுவின் விசேட செவ்வியின் ஊடாக வெளிப்பட்டபின்னர் இந்தப்பேரணி நடந்தது

இலங்கைத்தீவின் அரசியல் நெருக்கடியை தீர்க்க உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டுமென்ற குரல்கள் மீண்டும் ஒருமுறை பெரியஇடங்களான அமெரிக்காவும் மற்றும் பிரித்தானியா ஆகிய மையங்களில் இருந்து உயர்த்தப்பட்ட நிலையில் இன்று கொழும்பு காலி முகத்திடல் யானைகளால் களைகட்டியது.

அமெரிக்காவை பொறுத்தவரை அதன் ராஜாங்கத்திணைக்கள செய்தித்தொடர்பாளரும் இந்தவாரஇறுதியில் அரசதலைவர் டொனால்ட் ரம்ப்பினால் ஐ.நாவுக்கான அமெரிக்கத்தூதராக நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படும் முகமுமான ஹேதர் நௌர்திடமிருந்து(Heather Nauert) இந்த ருவிற் செய்தி மைத்திரியை நோக்கி வந்துள்ளது.

நாடாளுமன்;றத்தை கூட்டாமல் போக்குக்காட்டுவது இலங்கைக்கு களங்கம் என அமெரிக்க ராஜாங்க செய்தி வந்தது. இதேபோல இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்களில் கவலையடைவதாக லண்டன் செய்தியும் சந்தது.

சிறிலங்காவின் பிரதமராக ரணிலை ஏற்பதாக அல்லது மகிந்தவை ஏற்பதாஎன்பது தொடர்பாக வெஸ்ற் மினிஸ்டர் அரங்கில் எழுப்பட்ட வினாவுக்கு பிரித்தானியாவின் ஆசிய பசிபிக் பிராந்திய அமைச்சர் மார்க் பீல்ட்டின் இந்த கவலை வந்தது.

பிரித்தானியாவை பொறுத்தவரை ஸ்ரேற்ஸ் (States) எனப்படும் அரசுகளைத்தான் அங்கீகரிக்குமே தவிர கவுண்மென்ற்ஸ்(Governments) என அழைக்கப்படும் அரசாங்கங்களை அல்ல என்ற சூத்திரம் (UK is that it recognises states and notgovernments) லண்டன் வழங்கிய செய்திக்கு பின்னால் இருப்பதை கவனிக்கவேண்டும.;

ஆனால் இவ்வாறாக நாடாளுமன்;றத்தை உடனடியாக கூட்டும்படியான குரல்கள் ஒலித்தாலும்…..மறுபுறத்தே தமக்கு நடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத யதார்த்தம்; ஒருபுறத்தே இருக்கட்டும் கலகக்குரல்கள் ஒலிக்கட்டும் ஆனால் காரியத்தைப்பார்ப்போம்… பேரங்களை பிடிப்போம் என்ற கோதாவில் மைத்திரி மகிந்தகூட்டணி அமைச்சக நியமனங்களில் மும்முரம் காட்டுகின்றது.

இன்று காலை கூட சில அமைச்சர்கள் மற்றும் இராஜாங்கஅமைச்சர்கள் மைத்திரியால் கொலுவேற்றப்பட்டனர் சுசில்பிரேமஜயந்த பந்துல குணவர்த்தன போன்ற மகிந்தாவாதிகளுக்கும் கபினற் தகுதிகள் கிட்டின.

அதேபோல இந்தஆட்சிமாற்றத்தின் ஒரு முக்கியதொழினுட்ப சூத்திரதாரியாக (மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையிலான தரகுவேலை ) இருந்த எஸ்.பி.திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவிக்கு மேலதிகமாக ஆளுங்கட்சியின் பிரதமகொறடாப்பதவியும் வந்தது

இவ்வாறான நகர்வுகளுக்கு இடையேதான் நேற்று நடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்தன. பின்னர் வந்தவேகத்தில் அரசாங்கதகவல் திணைக்கள பதில் அறிக்கையால் அடங்கிய விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

நடாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என அறிவித்த அரசதரப்பு ஒரு சில விஷமக்குழுக்கள் இவ்வாறான வதந்திகளை பரப்புவதாக சொன்னாலும் இந்தசெய்தியில் உள்ள கருப்பொருளை மைத்திரி மகிந்ததரப்பு நிராகரிக்கவில்லை.

அதாவது அவசியமானால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பின்படி அரசதலைவருக்கு அதாவது மைத்திரிக்கு அதிகாரம் உண்டு என மைத்திரி அருகில் இருக்க மஹிந்த ஒரு அஸ்திரத்தை நேற்று எறிந்தார்.

அவ்வாறு எறியப்பட்ட இந்த நாடாளுமன்றத்தை கலைப்பு வளையத்தை தாங்கிப்பிடித்த சிறிலங்காவின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சரத் என். சில்வா அரசியமைப்பின் 19 ஆம்திருத்தத்தின் 33(2) விதிப்படி நாடாளுமன்றத்தைக்கலைக்கும் அதிகாரம் அரசதலைவருக்கு உண்டு என வியாக்கியானப்பல்லவி பாடினார்.

அத்துடன்நாட்டின் தற்போதைய சூழலில், நாடாளுமன்றத்தைக்கலைப்பதே சிறந்ததென்ற பரிந்துரையைவேறு வடக்கு கிழக்கு பிரிப்புக்கைங்கரியபுகழ் சரத் என். சில்வா எறிந்தார். ஆகமொத்தம் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டுமென்ற குரல்கள் போக்குக்காட்டப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை 14ஆம் திகதி அது கூட்டப்பட்டாலும் அன்றே மகிந்தவின் பெரும்பான்மையை நிருபிக்ககூடிய மாஜாயாலங்கள் இடம்பெறுமா?என்பதில் ஐயமுள்ளது.

ஏனெனில் 14ஆம் திகதிக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்களில் மகிந்த தனது பெரும்பான்மை நிரூபிப்பது, இல்லையென்றால் மகிந்தவுக்கு எதிரான ரணில்தரப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணையை நகர்த்துவது போன்ற எந்தவொரு நிரல்களும் இதுவரை வெளிப்படவில்லை.

இதனடிப்படையில் 14ஆம் திகதிக்கு முன்னர் குதிரைபேரங்கள் வாய்க்காமல் விட்டால் அன்றுமைத்திரியுடன் அக்கிராசனஉரையுடன் மீண்டும் நாடாளுமன்ற ஒத்திவைக்கப்படும் சாத்தியங்களே அதிகம் உண்டு. இதனைத் தவிர்க்க வேண்டுமானால் நாடாளுமன்றக்கலைப்பு உட்பட்ட வேறுவழி தில்லாலங்கடிகளை மைத்திரி மகிந்த கூட்டணி தமது கையில் எடுக்கக்கூடும்.

இதில் மஹிந்தவை பிரதமராக கொலுவிருத்தியதைமையப்படுத்தி சர்வஜன வாக்கெடுப்பு எனப்படும் குடியொப்பதை நடத்தும் வகையில் புதிய தினுசான தில்லாலங்கடிகள் வந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும்இல்லை. இவையெல்லாவற்றுக்கு முன்னர் சபாநாயகரை கடாவி விட்டு புதிய ஒருவருக்கு அந்த ஆசனத்தை வழங்க முனையும் கண்ணுறாவி முயற்சிகளும் நகர்த்தப்படக்கூடும்.

ஆனால் மைத்திரி மகிந்த கூட்டணியின் இவ்வாறான தில்லாலங்கடிகள் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய ஒரளவு உணர்ந்து எதிர்வினைகளை எடுக்கமுனைகிறார். இதனால்தான் கடந்த 2 தினங்களாக ரணிலை விட சபாநாயகர் கருஜயசூரியவை மைத்திரி மகிந்த கூட்டணி வறுத்;தெடுக்கிறது.

மஹிந்தவின் பிரதமர்தெரிவுக்கு எதிராக ரணில் அல்லது அவரது தரப்பு இதுவரை உச்சநீதிமன்றத்தை நாடவில்லை. அதுபோல ஏன் தாம் இந்த நகர்வை எடுக்கவில்லை என்பதற்குரிய பிளிறல் ஏதும் யானைகளிடம் இருந்து வராதநிலையும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. இதனால் சபாநாயகர் கரு ஜயசூரியாவின் கருத்துக்களும் நகர்வுகளும் மைத்திரி மகிந்த கூட்டணிக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் ஜனாதிபதியின் உத்தரவை மீறி சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம்இல்லை. அதிகாரம் இல்லவேயில்லை என அந்தக்கூட்டணியின் உயர் சுருதி பல்லவியும் வருகிறது.

ஆகமொத்த எதிர்வரும் புதன்வரை இந்தப்பல்லவி ஒலிக்கவுள்ள நிலையில் மைத்திரி மகிந்த கூட்டணியை ஊடறுத்து இதற்கு மங்களம் பாடும் வல்லமை இலங்கையில் யாருக்கு இருக்கக்கூடும்? இது இப்போதைக்கு ஒரு முக்கியமான வினா. இதற்கு பதில் கிட்டியதோ இல்லையோ அடாது மழை! விடாது அரசியல்நாடகம்!! இதுவே சமகால இலங்கை.

Leave A Reply

Your email address will not be published.