3 பிள்ளைகளின் தாயான கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன் ! காரணம் என்ன ? அதிர்ச்சி செய்தி

0

நல்ல காதல்களை விட தற்போது கள்ளக்காதல்கள் மலிந்து விட்டன . தமிழகத்தை உலுக்கிய அபிராமியின் கள்ளக்காதல் விவகாரம் சற்று ஓய ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் கள்ளகாதலினால் ஒரு உயிர் பறிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது .

தமிழ்நாட்டின் வேலூர் கீழ்மொணவூரை சேர்ந்தவர் கதிரேசன் இவரது மனைவி அனிதா.இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து 10 வருடங்கள் ஆகின்றது .இந்த தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். .

சிம்.எம்.சி மருத்துவமனையில் தாதியாக பணியாற்றி வந்த அனிதா நேற்றையதினம் வீட்டை விட்டு சென்ற நிலையில் அவரது சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , அனிதா தான் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமாருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அஜித்குமார் பைனான்சியர் தொழில் புரிந்து வருகின்றார் .

நட்பாக ஆரம்பித்த உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது .மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தீபாவளி அன்று அனிதாவின் கணவருக்கு தெரியவந்தது .

மனைவியின் கள்ளகாதலினால் கோபம் அடைந்த கணவர் அனிதாவை கண்டித்துள்ளார் .இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது .தீபாவளி தினம் சண்டையில் முடிந்தது .

கணவரின் கண்டிப்பினால் பீதியடைந்த அனிதா இனி எமக்குள் கள்ள தொடர்பு வேணாம் என்று அஜித்குமாரிடம் கூறியுள்ளார் .

அனிதா கூறியதை ஏற்க மறுத்த அஜித்குமார் அனிதாவை வெளியே அழைத்து சென்று கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்துள்ளார்கள் .

தலைமறைவாகியுள்ள அஜித்துக்குமாரை கைது செய்வதற்கு போலீசார் வலைவீசியுள்ளார்கள் .இந்த சம்பவம் வேலூர் பிரதேசத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.