5 ம் திகதி மீண்டும் கூடுகின்றது பாராளுமன்றம் ! மகிந்த அதிரடி! முடிவுக்கு வருமா நீயா நானா பிரதமர் சர்ச்சை ?

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சை ஒருவாறு முடிவுக்கு வரும் நாளினை எட்டியுள்ளது .

எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இன்று காலை பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய முடிவை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஒருவார காலமாக நீடித்து வரும் நானா நீயா பிரதமர் சர்ச்சை எதிர் வரும் 5 ம் திகதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

நல்லாட்சியை கலைத்து மகிந்தவை பிரதமராக மைத்திரி நியமித்தமை அரசியலமைப்புக்கு எதிரானது என்று அரசியல் ஆய்வாளர்கள் , மேற்குலக நாடுகளின் இராஜ தந்திரிகள் தெரிவித்து வருகின்றனர் .

மகிந்த இராஜபக்ச தொடர்ந்து பிரதமராக நீடிக்க வேண்டும் எனில் பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் .

அறுதி பெரும்பானமையை நிரூபிக்க தவறும் பட்சத்தில் மீண்டும் ரணில் பிரதமராக பதவியேற்ப்பார்.ரணில் மீண்டும் பிரதமரானால் நான் அதிகாரத்தில் இருக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி நேற்று இடம்பெற்ற சுதந்திர கட்சியின் கூட்டத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.