96 வயதில் பரீட்சை எழுதி 98 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த பாட்டி

0

கேரளாவைச் சேர்ந்த கார்த்தியாயினி எனும் 96 வயது பாட்டி அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவுத் தேர்வில் 98% மதிப்பெண்கள் பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.

கேரளவில் உள்ள ஆலாப்புழாவைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி. அவருக்கு வயது 96. சிறுவயதில் பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியாத சூழ்நிலையால் எழுதப் படிக்க தெரியாதவரான இந்த பாட்டிக்கு இப்போது திடிரென கல்வி கற்கும் ஆர்வம் உண்டானது. வெறும் எண்ணத்தில் மட்டும் இல்லாமல் செயலிலும் அதை நிறைவேற்ற வேண்டும் என முயன்ற கல்வி கற்ற பாட்டி இப்போது 98% மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்.

கேரள மாநிலம் எழுத்தறிவு இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தேர்வுகளில் எழுத்துத் தேர்வில் 98 சதவீதமும் வாசிக்கும் தேர்வில் 100 சதவீதமும் பெற்றார்.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கார்த்தியாயினி பாட்டிக்கு சான்றிதழ் கொடுத்து கௌரவிக்கவுள்ளார்.

தற்போது கேரளா முழுவதும் கார்த்தியாயினி பாட்டி தேர்வெழுதும் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.