அம்மாறையில் புராதன சிவனாலயம் கண்டுபிடிப்பு!

0

ஈழத்தின் கிழக்கு மாகாணம்
அம்மாறையில் உள்ள நிந்தவூரில்
பண்டைய புராதன சிவனாலயம்
வயல் புதர் மரங்களுக்கிடயே
கண்டுபிடிப்பு…

காலம்:12-ம் நூற்றாண்டு சிவனாலயம்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் 40 க்கும் மேற்பட்ட கிராமங்கள் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கிருந்த தமிழ்ர்கள் கொல்லப்பட்டது 1990-ம் ஆண்டுகால வரலாறு.

திராய்கேணி படுகொலை,உடும்பன் படுகொலை,கல்முனைகுடி படுகொலை,சம்பாந்துறை வீரமுனை படுகொலை என தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டு அங்கிருந்த தமிழர் மட்டகிளப்பு கல்முனை பகுதியில் வாழ்கிறார்கள்.

இந்த படுகொலைகள் நடந்த அம்பாறையில்தான் 12-ம் நூற்றாண்டு சோழர் காலத்தில் கட்டப்பட்ட புராதன ஆலயமொன்று சிதநை்த நிலையில் “நிந்தவூர்”மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவில் உள்ள மாட்டுப்பளை என்னுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோழைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சியம்மன் அம்மன் ஆலயத்திற்கு அருகில் இப்பராதான ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது.

ஈழத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயம் மாட்டுப் பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெகுவாக சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியில் உள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியலில் காடு மண்டி இவ்வாலயம் காணப்படுகிறது.இந்த ஆலயத்திற்கு அருகில் ஆலய தீர்த்த குளமும்
பழதடைந்து சிதைந்த நிலயில் காணப்படுகிறது…பாம்பு புற்றும் அங்கு காணப்படுகிறது.

ஈழத்தின் பொலநறுவை காலத்தில் வரலாற்றில்,சோழர்கள் ஆண்டபொழு இந்த ஆலயத்தை கட்டியிருக்கிறார்கள்.பொலநறுவை சிவன் ஆலயத்தை பயன்படுத்திய செங்கற்களே இந்த ஆலயத்திலும் சோழர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.கற்களை ஆய்வு செய்த பொழுது தெரிய வருகிறது.

மேற்கொண்டு,அங்கு தொல் துறையினர் கலவெட்டுக்களையும் ,பாழடைந்த ஆலய கட்டிடங்ளை ஆய்வு செய்வதன் மூலம் தமிழரர்களின் வாழ்வியலையும்,விபரமான வரலாற்றையும் அறிந்து தெரிந்து கொள்ள முடியும்.

14 அங்குள செங்கற்களான இவ்வாலய சிதைவுகளுடன் சுற்றவர கட்டடத்தின் ஒரு சிலபகுதிகள் காணப்படுகின்றன.

காடுமண்டி மரம் புற்களுக்கு மத்தியில் செடிகெடிகளுக்கு மத்தியில் மறைந்து இவாவளவு காலமும் இப்பராதன சிவனிலயம் மறைந்த இருந்திருக்கிறது.இவ்வாலயம் அருகில் சுமார் 50 அடி தொலவில் தீரத்த குளம் காடு மண்டி காணப்படுகிறது.இங்கு அதிகமான நாக பாம்புகள் காணப்படுவதாகவும்,அருகில் உள்ள பாம்பு புற்றில் 16 அடி நீலத்தில் இ்ன்றும் பாம்புகள் உள்ளதாகவும் கோயில் பாதுகவளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மிக விரைவில் இந்த சிவன் ஆலயத்தை கட்டியெழுப்பி கும்பாபிசேகம் செய்யவிருப்பதாக ஆலயத் தலைவர் கோ.கமலநாதன் தெரிவித்திருககிறார்…

இப்புராதன ஆலயத்தை காண மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று காணாபதுடன் உதவிகளையும் செய்கின்றனர்..தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று இது போன்ற நினைவுச் சி்ன்னங்களை பாதுகாப்பது எதிர்கால தலைமறையினருக்கு நம் வரலாறறை நினைவு படுத்தும் என்பது உண்மை….

Leave A Reply

Your email address will not be published.