அவளுக்காக ஒரு ஆணாக மாறினேன் ! ஓர் பெண்ணின் சோகக்கதை ! இறுதியில் நடந்தது என்ன ?

0

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராய் என்ற பெண் தனது காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார்.

தனியார் நிறுவனத்தில் இவர் பணியாற்றும்போது அங்கு பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருப்பினும் இரண்டு பேரும் பெண் என்பதால் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அர்ச்சானா அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறுவதாக முடிவு செய்துள்ளார். அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு இருவரும் இறுதிவரை வாழலாம் என முடிவெடுத்துள்ளனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு அர்ச்சானா ஆணாக மாறியுள்ளார். அத்துடன் தனது பெயரை திபு எனவும் மாற்றிக்கொண்டார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

ஆனால் சில காலம் சென்றதும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு, தன்னை தனிமையில் தவிக்கவிட்டு தனது காதலி பிரிந்து சென்றுவிட்டதாக திபு குற்றஞ்சாட்டியுள்ளார்.

நான் ஆணாகவே வாழ விரும்புகிறேன் என்றும் என்னை போல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எனது வாழ்க்கையை கதையாக எழுதவிருக்கிறேன் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.