ஆவா குழுவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது

0

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என மூன்று இளைஞர்களை யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸார் கைது செய்துள்ளதுடன், ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களையே அவர்களது வீட்டில் வைத்து நேற்று (30) கைது செய்துள்ளதுடன் வாள்களையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டமையால், சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸார் மூவரையும் நாளை இன்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.