பிக்பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கிய மகத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.
மகத் ராகவேந்திரா பிக்பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக களம் கண்டவர். அதன் பின்பு அவர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது, சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். மற்றொரு போட்டியாளராக களம் கண்டு இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா தத்தா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரின் அடுத்த படத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்தப் படத்தை பிரபு ராம் சி இயக்குகிறார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே இவர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்த ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அம்மணி சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.