போதநாயகி கொலை என்ன ஆனது? மனைவி மாண்டதும் புதுமாப்பிளையான செந்தூரன். படங்கள் இணைப்பு

0

வவுனியா கற்குளம் கிராமத்தை சேர்ந்த கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாக ஆங்கில விரிவுரையாளரான 27 வயதான நடராசா போதநாயகி என்பவர் திருகோணமலையில் காணாமல் போய் இரண்டு நாட்களின் பின் திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்

இதேவேளை இவர் தற்கொலை செய்திருக்கலாம் என அறியப்பட்ட போதிலும் ஒரு சாரார் தற்கொலைக்கு தூண்டுதலாக அவரது கணவர் இருந்துள்ளார் என ஆணித்தரமாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் போதாநாயகியின் குடும்பத்தினர் போதநாயகியின் இறப்புக்கு அவரது கணவரே காரணம் எனவும் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியிருந்தனர். இந்த வழக்கு திருகோணமலை நீதிமன்றில் விசாரணையில் உள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் வழக்கு விசாரணையை தவணையிடுமாறு பொலிஸாரால் கோரப்பட்டு வருகின்றது.

அதனால் வழக்கை கடந்த டிசெம்பர் 3 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்திருந்தார். கடந்த 3 ம் திகதி வழக்கு விசாரணைகள் எதுவும் இடம்பெறாத நிலையில் வருகின்ற தை மாதம் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை 23.12.2018 போதநாயகி உயிரிழந்து 90ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் வவுனியா கற்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மகளிர் அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து அஞ்சலி நிகழ்வொன்றை ஒழுங்கு படுத்தியுள்ளது.

அனைத்து நல் உள்ளங்களையும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு போதநாயகியின் இறப்புக்கு நீதி வேண்டி தருமாறும் அவர்கள் கேட்டு நிற்கின்றனர்.

மனைவி இழந்த கணவன் போலவா இருக்கிறார் செந்தூரன்?

இந் நி்லையில் மனைவி இறந்து ஒரு சில மாதம்தான் கடந்தது. டுபாய் சென்றுள்ள செந்தூரன் அடித்த கூத்துக்களே இப்படங்கள். பார்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

போதநாயகியை செந்தூரன் கொலை செய்துள்ளார் என்பதையே செந்தூரனின் களிப்பாட்டம் வெளிப்படுத்துகின்றது.

Leave A Reply

Your email address will not be published.