இந்தியா இலங்கைக்கு வழங்கிய ரயில் யாழில்!

0

நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ளது உத்தரதேவி 

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ரயில் நேற்று (19) பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

10 புதிய ரயில் என்ஜின்கள் மற்றும் 6 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ரயில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கழிவறை வசதிகள் என்பனவும் காணப்படுகின்றன.

பரீட்சார்த்த சேவையின் பின்னர் அதன் பெறுபேறுக்கு அமைய, ஏனைய என்ஜின்கள் மற்றும் பெட்டிகளை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பித்த புதிய ரயில் இன்று மாலை யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.

இந்த ரயில் நாளை (21) முதல் உத்தரதேவி என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.