இரணைமடு குளத்தில் உயிரிழந்த யாழ் மாணவன் இவர்தான் ! ஈழத்தை உலுக்கிய சோகம்

0

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதியில் இளைஞர் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள இரணைமடு குளத்தின் கலிங்கு பகுதியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இதில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார்.

நேற்று முன்தினம் (07) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வான்கதவுகள் திறந்துவிடப்பட்ட நிலையில் ஏராளமான மக்கள் வான்பாயும் பகுதியை காண படையெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.