இலங்கையில் 14 வயது மாணவி 17 வயது காதலனுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை !

0

இலங்கையின் அநுராதபுரத்தில் பாடசாலை காதல் ஜோடி ஒன்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து மதவாச்சி நோக்கி சென்ற ரயிலில் பாய்ந்தே குறித்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளது.

அநுராதபுரம் – மாத்தளை சந்தி, சமகிபுர என்ற இடத்தைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனும் மாத்தறையைச் சேர்ந்த 14 வயதான மாணவியுமே இவ்வாறு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடல்களை மீட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அத்தோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.