உண்மையில் பொட்டம்மான் உயிருடன் உள்ளாரா?

0

அண்மையில் கிழக்கு ஈழத்தில் மட்டக்களப்பில், இரண்டு சிங்கள பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கருணாதான் காரணம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டாரவும் சுமந்திரனும் குற்றம் சுமத்தியிருந்தனர். மகிந்த ராஜபக்ச மீண்டும் நாட்டில் தலைதூக்கியுள்ளார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் புலியின் பெயரால் பல்வேறு அநீதிகளை செய்வது வழக்கமானது. அவ்வாறான ஒரு செயற்பாடே மட்டக்களப்பு பொலிஸார் படுகொலை எனப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்று ஒரு மாதத்தை கடக்கும் நிலையில் கொலை கலாசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக கிழக்கில் கருணாவையும் வடக்கில் டக்ளஸையும் மகிந்த வளர்த்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கருணா கடுமையாக துள்ளி வருகின்றார். மகிந்த ராஜபக்சவின் மீள் வருகை கருணாவுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. வியாழேந்திரனை மகிந்தவுடன் சேர்த்ததும் கருணாதான் என்று பெருமிதப்படுகிறார்.

இலங்கையில் ஆட்சி மாறும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்று தான் கூறியதன் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கருணா கூறியிருந்தார். கருணாவிற்கு ஒரு டுவிட்டர் கணக்கு இருந்தால் பெரிய பிஸ்தா என்ற நினைப்பு. எல்லாவற்றையையும் வாங்கலாம் என்ற நினைப்பு. கருணாவுக்கு இப்போது பணம் எல்லாம் தேவை இல்லை. அவர் இலங்கையின் முன்னணி பணக்காரன். அதற்காகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து சிங்கள அரசிடம் சரணடைந்து பணம் வாங்கியுள்ளார்.

சரி, கருணாவின் டுவிட்டர் பக்கத்தை தமிழீழ சைபர் குழு முடக்கியதுதான் அவருக்கு பெரிய அடி. மாவீரர் தின நாட்களில் கருணாவின் டுவிட்டர் பக்கத்தை தமிழீழ இளைஞர்கள் முடக்கியிருந்தார்கள். இதனால் கருணா ஆடிப் போனார். அத்துடன் கருணா தமிழ், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்னகளுடன் பேசி பண டீல் எல்லாம் மீட்கப்பட்டுள்ளது. வெளியில் மகிந்தவின் ஆள்போல தன்னை காட்டிக் கொண்ட கருணா, ரணிலுடனும் டீல் பேசியுள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தை மீட்டெடுத்த கருணா, 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் தனக்கு கருணா அம்மான் என்ற பெயர் ஒன்று இருந்ததாக மீண்டும் பட்சா பட பாணியில் டயலக் விட்டுள்ளார். அதற்கு ஒரு சில நாட்களின் பின்னர், மட்டக்களப்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் மாவீரர் தினம் தமிழீழத்தில் வெகு எழுச்சியாக இடம்பெற்றது. தமிழீழம் எங்குமுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் சொன்ன சேதிகள் ஏராளம்.

புலிகள்தான் மக்கள். மக்கள்தான் புலிகள் என்பதை அன்றைய நாள் வெளிக்காட்டியது. அத்துடன் தமிழீழ இலட்சியத்தை எமது மக்கள் கைவிடவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிக அமைதியாக, மிக ஜனநாயகமாக எங்கள் விடுதலைப் புலி வீரர்கள் கற்றுத் தந்த ஒழுக்கத்தின்படி இவையெல்லாம் உணர்த்தப்பட்டது. இந்தக் காட்சிகளை பார்க்கும்போது கருணாவுக்கு வயிறு எரிந்திருக்கும். தமிழீழத்திற்கு துரோகம் செய்தமையால் அவரை தமிழீழ மக்கள் துரோகி என்று அழைத்து ஒதுக்கி வருகிறார்கள்.

தேர்தலில் அவரால் வெல்ல முடியவில்லை. மகிந்த வந்தால் பின் கதவால் எம்பியாகலாம், அமைச்சராகலாம் என்று கருணா கனவு காண்கிறார். அதற்காகவே கருணா மகிந்தவுக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கருணாவே மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் படுகொலையை செய்துள்ளார். கருணா பொலிஸாரை படுகொலை செய்வதிலும் பொதுவாக படுகொலை செய்வதிலும் நாசகார வேலைகளை செய்வதிலும் கை தேர்ந்தவர்.

இந்த நிலையில் மீண்டும் புலிப் பீதியை உருவாக்கி, மகிந்தவை தெற்கில் பலப்படுத்த கருணா இந்த நாசகார வேலையை செய்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டமையை முள்ளிவாய்க்காலில் தெளிவாக அறிவாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் எத்தனையோ தடவை குண்டுகளை சிங்கள அரசு வெடிக்கச் செய்திருக்கிறது. எத்தனையோ பேரை படுகொலை செய்திருக்கிறது.

விடுதலைப் புலிகளை கைது செய்கிறோம், மீண்டும் விடுதலைப் புலிகள் புத்துயிர்ப்பு என்று பல புனை கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது. அத்தனையும் பொய். தமது அரசியல் நலன்களுக்காகவும் அரசியல் பரபரப்புக்களுக்காகவும் அவிழ்த்துவிடும் கதைகள் இவை. தற்போது அவ்வாறே விடுதலைப் புலிகள் வவுணதீவு பொலிஸாரை கொன்றிருக்கலாம் என்ற புதிய கதையை சிங்கள அரசின் கைக்கூலி துரோகி கருணா அவிழத்து விட்டுள்ளார்.

அத்துடன் பொட்டம்மான் கொல்லப்படவில்லை என்றும் அவர் நோர்வேயில் மறைந்துள்ளதாகவும் கருணா கூறியுள்ளார். அவரின் வழிகாட்டலில் புலிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் கருணா கதைவிட்டுள்ளார். பொட்டம்மான் இலங்கை அரச படைகளால் இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டமைக்கான எந்த சான்றும் இல்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் தலைவர் பிரபாகரனின் பின்னர் விடுதலைப் போராட்டத்திற்கு அவர் தலமை தாங்குவார் என்றும் ஈழத் தமிழ் இனம் எதிர்பார்த்திருக்கிறது.

ஆனால், அதற்கான முறையான அறிவிப்புக்கள், செயற்பாடுகள் உள்ளன. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்வதாக அறிவித்து விட்டார்கள். புலிகளின் அடுத்த கட்டம் பற்றிய உத்தியோக பூர்வ அறிவித்தலே இங்கு அவசியம். பொட்டம்மான் உயிருடன் இருகக்கூடும் என்ற ஊககத்தை வைத்து கருணா தன்னுடைய கள்ள விளையாட்டையும் அரசியலையும் வியாபாரத்தையும் செய்யப் பார்க்கிறார். பொட்டம்மான் உயிருடன் இருந்தால் விடுதலைப் புலிகளின் பெயரால் கருணா செய்யும் அராஜகங்களுக்கு தண்டணை நன்றாக வழங்கப்படும். கருணாவை வரலாறு மன்னிக்காது.

ஏனெனில் கருணா, விடுதலைப் புலிகளை அழிக்க தான் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறியுள்ளார். அதாவது தான் செய்த தமிழீழத் துரோகத்தை அவர் ஓப்புக்கொண்டுள்ளார். இதனால் இவருக்கு வரலாறு நல்ல தண்டணையைக் கொடுக்கும். எங்கள் மக்கள் உயிரையும் உதிரத்தையும் உணர்வையும் கொடுத்து வளர்த்த போராட்டத்தை, தன் சொந்த நலன்களுக்காக பலியிட்ட கருணா நிச்சயம் பலனை அனுபவிப்பார். பெண் இன்பம், குடி இன்பம் என்று அற்பசொற்ப நலன்களுக்காக துரோகம் இழைத்தவர் கருணா.

மீண்டும் விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற்றுவிட்டதாக கருணா கூறியுள்ளார். அதன் ஒரு வெளிப்பாடே வவுணதீவு பொலிஸார் படுகொலை என்றும் கூறியுள்ளார். பொட்டம்மான் உண்மையில் உயிருடன் இருந்தால், அல்லது விடுதலைப் புலிகள் உண்மையில் புத்துயிர் பெற்றால் அது கருணா வாயிலாகவே வெளிப்படுத்தப்படும். எதிரியை விட துரோகி ஆபத்தானவன் என்ற தலைவரின் எண்ண வெளிப்பாட்டுக்கு அமைய, கருணா தண்டிக்கப்படும் நாளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரகசியம் வெளிப்படும்.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
01.12.2018

Leave A Reply

Your email address will not be published.