கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை

0

 கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பங்கேற்கமாட்டாரென அக்கட்சி தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வில் நாளை (திங்கட்கிழமை) பங்கேற்பதற்காக இன்று மாலை கொடைக்கானலுக்கு கமல் செல்லவுள்ளார். இதனால் சிலை திறப்பு விழாவில் பங்குகொள்வதற்கு வாய்ப்பில்லையென மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் கமல் இணைய போவதாகவும் அவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டதாகவும் தகவல் அண்மையில் வெளியாகியது.

ஆனால் குறித்த தகவலை கமல் மறுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நான் அரசியலுக்கு வந்த காரணத்தை எனது கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நன்கு அறிவார்கள்.

மேலும்  குறுகிய ஆதாயங்களுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆகையால்  என் தொடர்பாக வெளியாகும் பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.