கலைஞரின் சிலை திறக்க சென்னை வந்தார் சோனியா காந்தி! தமிழர்கள் எதிர்ப்பு!!

0

மறைந்த தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

சென்னை விமநிலையத்திற்கு வந்த இவர்களை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ் குமரி ஆனந்தன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

மறைந்த கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிறுக்கிழமை) சென்னையில் நடைபெறவுள்ளது.

அத்தோடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையும், புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையும் இன்று திறக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.