கள்ளக்காதல் மோகத்தால் பிஞ்சுக் குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு நீதிமன்றம் வைத்த மெகா ஆப்பு !

0

கள்ளக்காதல் மோகத்தால் பிஞ்சுக் குழந்தைகளை கொன்ற அபிராமியின் ஜாமீன் மனு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார்.

பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படியும் ஒரு கேடுகெட்ட ஜென்மம் இருக்குமா என பல விவாதங்கள் எழுந்தது.

இந்நிலையில் அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.