கிளிநொச்சியில் பயங்கர விபத்து; ஒரேதடவையில் மோதிய மூன்று வாகனங்கள்!

0

இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இன்று பிற்பகல் 1:30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. இந்த விபத்தில் தனியார் பேருந்து ஒன்றும் இரண்டு டிப்பர் ரக பாரவுந்துகளும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

தனியார் பேருந்து, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் முன்னால் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்தபோது அதன் பின்னால் வந்த டிப்பர் அதனை முந்த முற்பட்டுள்ளது. இதன்போது பேருந்தின் முன்னால் வந்துகொண்டிருந்த டிப்பரும், பேருந்தும், பேருந்தை முந்த முற்பட்ட டிப்பரும் மோதியுள்ளன.

இந்த விபத்தில் இரண்டு டிப்பர்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டதுடன் பேருந்தின் ஒருபக்கம் பாதிக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இரண்டு டிப்பர்களினது சாரதிகள் மற்றும் பேருந்தில் இருந்த சிறுமி ஒருவர் உள்ளிட்ட மூவர் இந்த விபத்தில் காயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.