குஜராத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து! – 10 பேர் உயிரிழந்துள்ளனர்

0

குஜராத்தில் மகால்-பரிதாபாத் வீதியில் அகவா நகரில் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் அம்ரோலி என்ற இடத்தை சேர்ந்த 80 மாணவர்கள் பேருந்தொன்றில் டாங் மாவட்டத்திலுள்ள சபரி அணைக்கட்டுக்கு சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், சுற்றுலாவை முடித்து விட்டு அவர்கள் பேருந்தில் சூரத்துக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், அவர்கள் பயணித்த பேருந்து மகால்-பரிதாபாத் வீதியில் அகவா நகரில் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளனது.

இந்தவிபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அதில் பயணித்த மாணவர்களில் 24 பேர் படுகாயமடைந்த நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த மாணவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொலிஸார் விபத்துக் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.