கொத்து ரொட்டியில் இறந்த அரணை ! ஜாக்கிரதை கொத்துரொட்டி பிரியர்களே ! படம் உள்ளே

0

இலங்கையின் காத்ததான்குடியில் உள்ள இரவு உணவகத்தில் வாங்கப்பட்ட கொத்து ரொட்டி பார்சலில் இருந்து இறந்த அரணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவுப் பொதியை வாங்கிய நபர் சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததற்கமைய குறித்த உணவகம் பரிசோதிக்கப்பட்டு மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை கைப்பற்றியதோடு ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி யு.எல். நஷர்டீன் தெரிவித்தார்.

குறித்த உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஹோட்டல் சுகாதாரமான முறையில் சீர்செய்யப்பட்டு சுகாதார அதிகாரிகளின் அறிக்கையின் பின்பு வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என மேலும் உத்தரவிட்டார்.

இதே வேளை குறித்த பிரதேசத்தில் நடாத்தப்பட்ட சோதனைகளின் போது 10 உணவகங்களிலிருந்து மனித பாவனைக்கு உதவாத உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.