கொழும்பு துறைமுகத்தில் வெளியேறியது அமெரிக்க கடற்படை கப்பல்!

0

கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த 21 ஆம் திகதி வந்த ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை கப்பலான “ரஸ்மோர்” கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) திரும்பியுள்ளது.

நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இந்த கப்பல், 380 கடற்படை வீரர்களை கொண்டுள்ளது. 185 மீற்றர் நீளமான இந்த கப்பல், 18000 தொன் எடையை கொண்டது.

6 நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இக் குழுவினர் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றியது. இந்நிலையில், இன்று கொழும்பு துறைமுகத்தில் இருந்து நாட்டுக்கு திரும்பியுள்ளது.

ஏற்கனவே ரஷ்யாவின் மூன்று கப்பல்களும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.