கௌசல்யாவை மணந்த சக்தி பல பெண்களை ஏமாற்றியவர்! குங்குமம் ஆசிரியர் பரபரப்பு தகவல்!

0

ஆவணக்கொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யாவை மறுமணம் செய்து கொண்டவர் பல பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றும் இது பலருக்கும் தெரியும் என்றும் தமிழகத்தின் பிரபல வார இதழான குங்குமம் ஆசிரியர் கே.என். சிவராமன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளா்ர. அவர் முகப்புத்தகத்தில் எழுதிய குறிப்பு இதோ.

இதுவா மறுமணம்? இதையா தமிழக முற்போக்கு சக்திகள் என தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள்? ஒரு திருநங்கை உட்பட சுயசாதி விமர்சனத்துடன் சமூக மாற்றத்துக்காக பொது வாழ்க்கைக்கு வந்த நான்கைந்து இளம் பெண்களின் வாழ்க்கையை காதல் என்னும் பெயரில் சீரழித்தது வரை மணமகன் மீதான குற்றப்பத்திரிகை அதிகம்.

அதிலும் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் வாழ்ந்து அவளது ஆறு மாத கருவை வலுக்கட்டாயமாகக் கலைத்து நடுத்தெருவில் நிறுத்தியவன். இவையெல்லாம் அவதூறுகள் அல்ல. தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நியாயம் கிடைக்காமல் கதறிக் கொண்டிருக்கும் நியாயங்கள். இதே முகநூலில் பலருக்கும் தெரியும். பத்திரிகையாளர்கள் உட்பட.

அவ்வளவு ஏன் அந்த மணமகனை இப்போது சீர்திருத்த மணம் புரிந்திருக்கும் மணமகள் முதல் புரட்சிகரமாக இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கும் இயக்கங்களின் தலைவர்கள் வரை அனைவருக்குமே எல்லாமே தெரியும் என்பதுதான் கொடுமை. பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் இவர்களிடமும் நியாயம் கேட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

சாதி ஆணவ படுகொலை, நாடகக் காதல் என்பதற்கெல்லாம் விளக்கம் தெரியும்.நடந்து முடிந்திருக்கும் இத்திருமணத்தையும் எப்படி அழைக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். திருமண செய்தி அறிந்து மகிழ்ச்சியும் மனநிறைவுமாக தொடங்கிய இந்நாள் இப்படி மனக் கொந்தளிப்புடன் முடிந்திருக்க வேண்டியதில்லை…

சிவராமன் முகப்புத்தகத்தில் எழுதிய இந்த தகவல்களை தமிழக பத்திரிகையாளர் வினி சர்பனாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கே.என். சிவராமன். ஆசிரியர், குங்குமம்.

https://www.facebook.com/nagarajan.sivaraman1?__tn__=%2CdC-R-R&eid=ARAje6FOZ3M8Ez8Swm5r01uWiTwn7oZ3sSpKdMs4bJb3eA5kS2w0hXDRi2FHzqhk5mv7BN51WnXRv99H&hc_ref=ARSS5I1ku3I2d9BWEuTPbzdU9PTZUQzaadshXUcO4Corh7v59Ln2GVz2YoVAPgXKAIQ&fref=nf

Leave A Reply

Your email address will not be published.