சபரிமலைக்கு செல்ல முயன்ற 11 பெண்கள் தடுத்து நிறுத்தம்; பம்பையில் பரபரப்பு.!

0

பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி பெண்களை சபரிமலை கோவிலுக்குள்ளாக பெண்களை அனுமதிக்க மறுப்பதென்பது சட்டவிரோத செயல். எனவே, பெண்களுக்கும் சபரிமலை கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்கப்பட வேண்டுமென பெண்களுக்கான வழிபாட்டு உரிமை கோரும் வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதிரடி தீர்ப்பளித்திருந்தது உச்சநீதிமன்றம்.

ஆனால், நீண்ட காலமாக தொடரும் எங்கள் வழக்கத்தில் நீதிமன்றம் தலையிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்து கேரளா முழுவதும் மூர்க்கமான போராட்டங்களில் ஈடுபட்டன பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள்.

சபரிமலைக்கு செல்வதற்கான விரத முறைகளை பின்பற்றி கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வாக்கு அரசியலுக்காக பாஜகவே இத்தகைய போராட்டங்களை தூண்டிவிடுவதாக அம்மாநில அரசு குற்றம் சாட்டி வந்தது.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த 11 பெண்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்களை கோட்டயம் ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர் காவல்துறையினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பம்பைக்கு சென்ற பெண்களை ஆண் பக்தர்களை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் அனன்யா, திருப்தி, ரஞ்சுமோள், அவந்திகா ஆகிய நான்கு திருநங்கைகள் சபரிமலையில் வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.