சமஷ்டி, வடக்கு கிழக்கு இணைப்புக்கு ரணில் இணக்கம்! மஹிந்தவாதிகளின் புதுக்கதை!!

0

பிரிவினைவாதத்தை தொடர்ந்தும் வலியுறுத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால் மஹிந்த ராஜபக்சவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டியிருக்க முடியுமென மஹிந்தவாதிகள் புதிய கதையொன்றை தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கு துரோகமிழைப்பதாக மஹிந்தவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியிருக்கின்றார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து, முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டு சிறிலங்கா ஜனாதிபதி விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை மறைமுகமாக விமர்சித்து வரும், மஹிந்தவாதிகள், இது மக்களுக்கான அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.

இது தொடர்பில் விமல் வீரவன்ச தெரிவிக்கையில் – “மக்கள் நீதிமன்றத்தின் முன் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அலோஸியசின் பணத்திற்கு விலைபோன 118 உறுப்பினர்களைக் கொண்ட, குரங்குகளைப்போல் அங்குமிங்கும் பாயும் உறுப்பினர்களைக் இந்த நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்திச் செல்வதா இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கான சிறந்த இடம் மக்கள் மனமே. அந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறந்த மனமே. அந்த வழக்கை மக்கள் முன் கொண்டுசெல்ல வேண்டாமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மக்களுக்கு இருந்த வாய்ப்பு இன்று இல்லாமல் போயுள்ளது”.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள மஹிந்த தரப்பு தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு

வழங்கியதை மையப்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் வகையிலான பிரசாரங்களை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக மஹிந்தவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல்

வீரவன்சவின் கூற்றுக்கள் ரணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டதாக பாரதூரமான குற்றச்சாட்டை “ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சில செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் அது சார்ந்தாகவே அமையும். தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளைக் ஏற்றுக்கொண்டால், நாடாளுமன்றத்தில் 113 பேரின் ஆதரவைப் பெறுவது ஒன்றும் மஹிந்த ராஜபக்சவுக்கு பெரிய காரியமாக இருந்திருக்காது.

சமஷ்டி யாப்பினை வழங்குவோம். வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல்துறை சார்ந்த இடங்களை பாதுகாக்கும் வர்த்தமானி அறிவித்தலை விளக்கிக்கொள்கிறோம். அந்த இடங்களை தேவையான வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கு மாகாண, பிரதேச சபைகளுக்கு அதிகாரத்தை வழங்குவோம். வன பாதுகாப்பு வர்த்தமானி அறிவித்தலை விளக்கிக்கொள்கிறோம் என அனைத்திற்கும் இணக்கம் தெரிவித்தே ரணில்

விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். இவ்வாறான நாட்டுக்கும் எதிரான பிரிவினைவாத கோரிக்கைகளுக்கு இணங்கிச் செல்வாராயின் மஹிந்த ராஜபக்சவுக்கு 113 பேரின் ஆதரவை பெறுவது ஒன்றும் பெரிய விடயமல்ல.

மஹிந்த செய்யாத விடயங்களையே ரணில் செய்வார். வெளிநாட்டு சக்திகளுக்கும், தமிழ்க் கூட்டமைப்பிற்கும் ரணிலை மீண்டும் பதவிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை காணப்படுகின்றது. வெளிநாட்டு தூதரகங்களுக்கு அவர்களின் நிகழ்ச்சி நிரலை இங்கு செயற்படுத்துவதற்கான தேவை இருக்கின்றது”. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.