சற்றுமுன்னர் கொழும்பில் நடந்த திருப்பம்! கடும் அதிர்ச்சியில் மஹிந்த!!

0

சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் அடுத்தவருடம் சனவரிக்கு ஒத்திவைத்துள்ளது.

இன்று காலை பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக 122 எம் பிக்கள் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்தது.

இதன்படி மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை அடுத்த ஆண்டான 2019 ஜனவரி 16 , 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான இடைக்காலத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென சட்ட நிபுணர்களால் கூறப்பட்டுள்ளது.

அடுத்தவருடம் சனவரி மாதம் தேர்தல் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றின் இந்த நடவடிக்கை மஹிந்த ராஜபக்‌ஷவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் மேன்முறையீட்டு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை ஆட்சேபித்து மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் இன்றைய தினம் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.