சவப்பெட்டியில் இருந்து வந்த இறந்த பெண்ணின் குரல் ! இறுதிச் சடங்கில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் !

0

இறுதிச்சடங்கில் சவப்பெட்டியில் இருந்து வந்த இறந்த பெண்ணின் குரல் அர்ஜென்டினாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவின் Buenos Aires என்ற பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவருக்கு இறுதிச் சடங்கு நடத்துவதற்காக அவரது உடலை சவப்பெட்டியில் வைத்த போது சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

உடனடியாக விரைந்து செயற்பட்ட உறவினர்கள் இது அந்தப் பெண்ணின் குரல் தான் என்று காரில் இருந்து சவப்பெட்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் இறந்த பெண்ணை பரிசோதித்தனர். அப்போது குறித்த பெண் இறந்து 24 மணி நேரம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளனர். கொட்டும் மழையில் இச்சம்பவம் இடம்பெற்றமையினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இருந்தும் சவப்பெட்டியில் இருந்து சத்தம் வந்தது என்று கூறுகிறார்கள். அது என்னவாக இருக்கும் என்று ஒரு வித கிலி உணர்வு உறவினர்களிடையே உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.