சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே: மீண்டும் கூறிய மைத்ரி!

0

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடாளுமன்றில் மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்து அதற்கு முறையான வாக்கெடுப்பையும் நடத்துமாறு வலியுறுத்தியிருக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் சற்றுமுன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சிறிலங்கா ஜனாதிபதி தனது இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருக்கின்றார்.

மைத்ரியினால் ஒக்டோபர் 26-ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடாளுமன்றில் இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையும், மஹிந்தவால் தொடர்ச்சியாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனதையும் சுட்டிக்காட்டி நவம்பர் 29 ஆம் திகதியான நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணியினால் பரிந்துரைக்கப்படும் ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் இரவு 7.30 அளவில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபாலவை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.

முன்னதாக இந்த சந்திப்பு ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டதற்கு அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆறு மணிக்கே ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும் பண்டாரநாயக்க சர்வதேச ஞர்பகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்தவுடன் இணைந்து சமூர்த்தி அதிகாரிகளுக்க நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சிறிலங்கா ஜனாதிபதி ஒன்றரை மணி நேரம் கழித்தே அங்கு வந்திருந்தார்.

இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு மணி நேர பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.