ஜனாதிபதிக்கு முன்னால் நடந்த அடிதடி ! அதிர்ச்சியில் உறைந்த மைத்திரி

0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் நேற்று பெரும் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி முன்னிலையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் வரை சென்றுள்ளதுடன் தொகுதி அமைப்பாளர்கள் பியதாசவை தாக்க முயற்சி செய்ததாகவும், உடனடியாக செயற்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், மோதலை சமரசப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லைத் தெரிவிக்கப்படுகிறது.

ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழித்து விட்டதாக தொகுதி அமைப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டதை முழு நாடும் பார்த்ததாகவும் அதனை மறைக்க முடியாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் முடிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.