ஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றிய வழக்கு! அரிய படங்கள் இணைப்பு

0

ஜெ. ஜெயலிதா எனும் சகாப்தம் நிறைவடைந்து இன்றோடு இரண்டாம் ஆண்டு. தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி சென்ற ஜெயலலிதாவின் பிரிவு அதிமுக தொண்டர்களுக்கு ஈடுச்செய்ய முடியாத ஒன்று.

அதிமுக என்பதை விட அம்மா கட்சி என்று அழைக்கும் கடைகோடி தொண்டர்கள் தான் அதிகம். ஒரு பெண்மணியால் எப்படி இப்படி ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி அதை கட்டுக்கோப்பாக வழி நடத்த முடிந்தது என்பது தான் பலரின் கேள்வியும்.

ஜெயலலிதா மீதான விமர்சனங்கள் ஏகப்பட்டது இருந்தாலும் அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா என்றுமே புரட்சித்தலைவி, தங்கதாரகை, இதயம் தெய்வம் அம்மா தான். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஜெயலலிதா காலமானர் என்ற செய்தி வெளியாகியும், அதை ஏற்க மக்கள் மறுத்தனர். ஜெ. உடல் நலம் தேறி மீண்டும் எழுந்து வர வேண்டும் என ஏங்கிய ஒட்டுமொத்த மக்களின் பிராத்தனையையும் அன்று வீணாகியது.

இதோ 2 ஆண்டுகள் வேகமாக உருண்டோடி விட்டது. அவரின் மறைவுக்கு பின்பு தமிழகம் சந்தித்த அனைத்து மாறுதல்களை மக்கள் நன்கு அறிவார்கள். ஜெயலலிதா வாழ்க்கையை புரட்டிபோட்ட அந்த வழக்கு இன்று வரை அதிமுகவினரின் கறுப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வழக்கு…யார் அந்த நீதிபதி மைக்கல் டி குன்ஹா? என கேட்க வைத்ததும் இந்த வழக்கு தான்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ம் ஆண்டு திமுக அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் சுப்ரமணிய சாமிதான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்து குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த திமுக அரசு வழக்கைப் போட்டது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அப்போதைய ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார்.

வழக்கு தொடரப்பட்ட 1997ம் ஆண்டில் இருந்து இறுதி தீர்ப்பு வெளியான 14. 2.17 வரை இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் மக்கள் வரிப்பணம் சுமார் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பல்வேறு காரணங்களை விதவிதமாக சொல்லி இந்த வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி தடுத்து நிறுத்திட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.

இந்த வழக்கிற்காக இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் ஆஜரானார்கள். ஜெயலலிதா என்னும் இமயம் முதன்முறையாக சறுக்கியது இந்த வழக்கில் தான். குதிரை போல் சட்டென்று எழுந்தாலும் மனதளவில் இந்த வழக்கால் ஜெயலலிதா அனுபவித்த இன்னல்கள் ஏராளம்.

வழ‌க்‌கி‌ல் த‌ண்டனை ‌கிடை‌த்தா‌ல் ஜெயல‌லிதா‌வி‌ன் அர‌‌சிய‌ல் வா‌ழ்‌க்கையே கே‌ள்‌‌வி‌க்கு‌றியாகு‌ம் எ‌ன்று‌ அரசியல் தலைவர்கள் கணித்தனர். கடந்த 2001ஆ‌ம் ‌ஆ‌ண்டு ‌ஜெயல‌லிதா முத‌ல்வராக பொறு‌ப்பே‌ற்றதையடு‌த்து சொ‌த்து‌க் கு‌வி‌ப்பு வழ‌‌க்‌கு ‌விசாரணை‌யி‌ல் தொ‌ய்வு ஏ‌ற்ப‌ட்டது.

இதையடு‌த்து, ‌தி.மு.க. பொ‌து‌ச் செயல‌ர் பேரா‌சி‌ரிய‌ர் அ‌ன்பழக‌ன், சொ‌‌த்து‌க் கு‌வி‌ப்பு வழ‌க்கை வேறு மா‌நில‌த்து‌க்கு மா‌ற்ற‌க் கோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் க‌ர்நாடக மா‌நில‌‌த்து‌க்கு மா‌ற்‌றியது.

பெங்களூரு த‌னி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 10 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌‌ல் நட‌ந்து வரு‌ம் இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ஜெயல‌லிதா இதுவரை 107 முறை வா‌ய்தா வா‌ங்‌கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் சூடான நீதிபதி ஜெயலலிதாவை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜரா‌க உ‌த்தர‌வி‌ட்டா‌ர். இ‌ந்த உ‌த்தரவை எ‌தி‌‌ர்‌த்து ஜெயல‌லிதா உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ை நாடினா‌ர். ஆனா‌ல், வழ‌க்‌கி‌ல் ஆஜராக ஜெயல‌லிதாவு‌க்கு ‌வில‌க்கு அ‌ளி‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌த்து‌வி‌ட்டதோடு, ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜரா‌கி சா‌ட்‌சிய‌ம் அ‌ளி‌க்க உ‌த்தர‌வி‌ட்டது.

இந்த வழக்கிற்காக ஜெயலலிதாவிடம் நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மட்டும் 1314 . 2 ஆவது குற்றவாளியான சசிகலாவிடம் 604 கே‌ள்‌விகள் கேட்கப்பட்டனர். தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருந்துவந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தண்டனையை உறுதி செய்தது பெங்களூரு உயர் நீதிமன்றம்.

நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதத் தொகையும், மற்ற மூவருக்கு 10 கோடி ரூபாய் அபராதத் தொகையும் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய தினம் அதிமுகவினர் கணிக்காத பல நிகழ்வுகளும் அரங்கேறினர். காலை புத்துணர்ச்சியுடன் புறப்பட்டு சென்ற ஜெயலலிதா 21 நாட்கள் கழித்து தான் ஜாமீனில் வெளிவந்தார். சர்க்கரை நோயாளியான ஜெயலலிதா அவருக்கு தேவையான மாத்திரைகளை கூட அன்றைய தின எடுத்து செல்லவில்லை.

சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நால்வரும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய போது ஜெ சொன்ன முதல் வார்த்தை நான் குற்றவாளி இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது தானாம். 21 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு ஜெ சென்னை திரும்பிய போது அவரை வரவேற்க வழி முழுவதும் தொண்டர்கள் திரளாக கூடினர். பூ மாலைதூவி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் இருந்தது. வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த 2015 மே 11-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றுடம் அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆகியோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் 2017 ஆம் ஆண்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

21 ஆண்டுகளுக்கு பிறகு சரியாக 14.02.17 அன்று சொத்து வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளி என அறிவித்த நீதிபதி குன்ஹா தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் தீர்ப்பளித்தனர்.


இறக்கும் வரை தமிழக முதலமைச்சர் என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.