தனுஷ் vs சிவகார்த்திகேயன் : நேருக்கு நேர் மோதும் ஒரே நாள் ரிலீஸ்

0

தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 படமும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கனா படமும் ஒரே நாளில் ரிலீஸாகி நேருக்கு நேர் மோத இருக்கிறது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தனுஷூம் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 3 படத்தில் தனுஷூக்கு நண்பராக நடித்த சிவகார்த்திகேயன், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அதன்பின் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் சற்று குறைந்து பொதுநிகழ்வுகளில் மட்டுமே பேசிக் கொள்கின்றனர்.

கனா ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில் தனுஷ் தனது ‘மாரி 2’ திரைப்படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த ஒருசில மணி நேரங்களில் சிவகார்த்திகேயன் தனது ‘கனா’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ‘கனா’ திரைப்படமும் அதே டிசம்பர் 21ஆம் தேதிதான் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ மற்றும் ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’ திரைப்படங்கள் வெளிவருவதால் ‘மாரி 2’ திரைப்படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ‘கனாவும் இந்த போட்டியில் கலந்து கொண்டதால் தனுஷ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.