தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் – மோடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.!

0

காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு, கஜா புயல், காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு ஒப்புதல் என தொடர்ச்சியாக தமிழகத்தினை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய பாஜக அரசு அணுகி வருகிறது. இந்த நிலை தொடருமானால் எந்த சூழலிலும் இனி தமிழ்நாட்டிற்குள்ளாக பிரதமர் மோடி நுழைய இயலாத நிலையினை ஏற்படுத்த வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின்.

கர்நாடகத்தில் காவிரி அணையின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ச்சியாக முயற்சித்து வந்த நிலையில், மேகதாதுவிற்கு குறுக்கே அணைக்கட்டுவதற்கான அறிக்கையை மத்திய நீர்வளத்துறை சில தினங்களுக்கு முன்னதாக ஏற்றுக்கொண்டது. மேலும், அணை கட்டுவதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறானதோர் அணை கட்டப்படுமேயானால் தமிழர்களின் வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்கப்படும் எனவே காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கிட கூடாதென வலியுறுத்தி, இன்று தஞ்சையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் போராட்டம் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பது சற்றும் ஏற்றுக்கொள்ள கூடியதே அல்ல. தமிழகத்தை வஞ்சிக்க நினைத்து இப்படியான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவீர்களேயானால் நீங்கள் தமிழகத்திற்குள்ளாக எந்த காரணத்திற்காகவும் நுழைய முடியாது” என ஆவேசமாக பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.