தமிழ்நாட்டில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தம் ஏற்றப்பட்ட கொடுமை ! இரத்தம் தானம் செய்தவர் எடுத்த விபரீத முடிவு!

0

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு எய்ட்ஸ் கிருமி தொற்றுள்ள ரத்தம் கொடுத்தவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ஒருவர், சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இவர் கொடுத்த ரத்தத்தினை முறையாக பரிசோதிக்காமல் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.

அவ்வாறு ஏற்றப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று கலந்திருந்த காரணத்தினால் கர்ப்பிணி பெண்ணுக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இந்த விவகாரம் தொடர்பாக முறைப்பாடு தெரிவித்தமையைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குர் மேற்காண் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் மூவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் ரத்தம் கொடுத்த நபர் எலி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.