தலித்துக்களை தனிமைப்படுத்த வேண்டாம்! ரஞ்சித்தை சாடும் திருமாவனவன்!

0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புரட்சியாளர் அண்ணல். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், “புரட்சியாளர் அம்பேத்கரின் உழைப்பால் விளைந்திட்ட தனித்தொகுதிகளில் ஏனைய கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெல்பவர்கள் அந்த மக்களுக்காக எப்போதும் பேசுவதில்லை.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் கொன்றொழிக்கப்பட்ட சமயங்களிலும் அவர்கள் வாய் மூடி மௌனியாக கிடக்கிறார்கள். அப்படியானவர்களை புறக்கணித்துவிட்டு ஒடுக்கப்பட்டோருக்காக குரலெழுப்பும் தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்” என பேசியிருந்தார்.

ரஞ்சித்தின் இந்த ஆவேச குரல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரத்தினை வலியுறுத்துகிறது என கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருந்த சூழலில், ரஞ்சித்தின் யோசனை குறித்து இன்று கருத்து தெரிவித்த திருமா, “மைய நீரோட்ட அரசியலில் தங்களுக்கான அதிகாரத்தினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிற மக்கள், இம்மாதிரியான முயற்சிகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

திருமாவின் இந்த கருத்தின் மூலம் அவர் ரஞ்சித்தின் யோசனையை நிராகரித்துள்ளதாகவே தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.