தலைமுடி அறுக்கப்பட்ட நிலையில் கிணற்றில் இறந்து கிடந்த மாணவி ! அதிர்ச்சி செய்தி நடந்தது என்ன?

0

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தலைமுறை அறுக்கப்பட்டு கிணற்றில் மிதந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்த்தி என்ற கல்லூரி மாணவி பேருந்து மூலம் தினமும் கல்லூரிக்குச் சென்று கல்வி கற்று வந்த நிலையில், வழக்கம் போல் நேற்று வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு ஆர்த்தி கல்லூரிக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து சற்று தூரத்தில் கிணற்றுக்கு அருகில் ஆர்த்தியின் செருப்பு, தலைமுடி, பேக் போன்றவை இருப்பதாக பெண் ஒருவர் ஆர்த்தியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் தந்தை செல்லத்துரை வீட்டில் இருந்து சற்று தூரத்தில் உள்ள கிணற்றடியில் சென்று பாரத்தபோது அங்கு ஆர்த்தியின் ஒரு செருப்பு, அறுக்கப்பட்ட தலைமுடி, பேக் ஆகியவை சிதறிய நிலையில் கிடந்தது.

கிணற்றுக்குள் பாதாளகரண்டி விட்டு அலசியும், இறங்கியும் தேடிப்பார்த்தனர். அப்போது பாதாளகரண்டியில் ஆர்த்தியின் உடல் சிக்கியது.

சுடிதார் சால்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கிறார்கள்.

தகவல் அறிந்து வந்த கந்தர்வகோட்டை பொலிசார் ஆர்தியின் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கொலையாளி யார் என்று அறிவிதற்கு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த கொலையை செய்தவன் சைக்கோ கொலையாளியா என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.