திருகோணமலையில் மனைவியின் தகாத உறவினால் எரியூட்டப்பட்ட முச்சக்கரவண்டி ! கைதாகிய நபர்

0

திருகோணமலை – அக்போபுர பகுதியில் கடந்த 7ஆம் திகதி முச்சக்கரவண்டியொன்றினை தீயிட்டுக் கொளுத்திய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் நேற்றிரவு அக்போபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் மனைவியோடு முச்சக்கரவண்டியின் சாரதி கொண்டுள்ள தவறான உறவே முச்சக்கர வண்டி இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டமைக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தல்கஸ்வெவ, அக்போபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.