திருகோணமலையில் வயோதிபர் செய்து வந்த மோசமான செயல் ! வசமாக மாட்டிய சம்பவம்

0

கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவரை பொலிசார் நேற்றிரவு கைது செய்துள்ள சம்பவம் திருகோணமலையின் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வயோதிபர் திருகோணமலை, கின்னியா, கிளிகுஞ்சுமலை பகுதியை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவருகிறது.

உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே அவர் வசமாக சிக்கியுள்ளார்.

எனினும் கைது செய்யப்பட்ட முதியவர் தான் தொழிலின்றி இருப்பதால் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், இனி இந்த தொழிலில் ஈடுபட போவதில்லை எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட வயோதிபரை எதிர்வரும் ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உப்புவெளி பொலிசார் கட்டளையிட்டுள்ளனர்.

மேலும், குறித்த வயோதிபரின் வீட்டிலிருந்து 4500 மில்லிலீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.